Monday, November 18, 2024

Azhagar Kovil

 



திருமாலிரும் சோலை அழகர்      கோவிலில் தினமும் இரவு அர்த்த      ஜாம ஆராதனம் முடித்து விட்டு    திருமாலையாண்டான் ஸ்வாமி தன் திருமாளிகைக்கு  செல்லும் போது    அவருக்கு வயதாகி கண்பார்வை மங்கியதால் ஒரு கைங்கரியபரர் திருவடி பந்தம்  பிடித்துக் கொண்டு  அவருக்கு முன்னாள்  வழிகாட்டி  கொண்டு செல்லுவார் அதாவது திருவடிபிச்சன் அவர் பெயர் சுந்தர்ராஜன் என்பதுகாரணம் அந்தகாலம்  சோலைக்கு செல்லும் வழி முழுவதும் பொதுவாகவே இரூட்டாக தான் இருக்கும் அதுவும்   திருமாலிருஞ்சோலை வழி ஒரே     வனாந்திரபகுதி மரம் அடர்த்தியாக இருப்பதால் ஒரே இருட்டாகவும் இருக்கும் தன் கண்பார்வை மங்கியதால் வழி காட்ட திருவடிபிச்சன் வைத்திருந்தார் திருமாலையாண்டான்இப்படி ஒருநாள் பகவத் ஆராதன கைங்கர்யம் முடித்து அர்த்தஜாம ஆராதனமும் முடித்து விட்டு  தன் திருமாளிகை செல்ல ஆயத்தமானபோது திருவடிபந்தம் பிடிக்கும் சிஷ்யனை காணவில்லை 

( அக்காலத்தில் தன் கைங்கர்யம் செய்யும் அடியார்களை சிஷ்யனாக வரிப்பது வழக்கம்) திருமாலையாண்டான் திருவடி பந்தம் பிடிக்கும் அந்த சிஷ்யன் பெயரை      ஒரு முறைக்கு இருமுறை 

சுந்தரராஜான்னு அழைத்தார் உடனே கையில் திருவடி பந்தத்துடன் வந்து     

ஸ்வாமின்  அடியேன் என்று சொல்லி  அவருக்கு முன்னாள் சென்று வழிகாட்டி சென்றபடியே திருமாலையாண்டான் திருமாளிகை    வந்த உடன் அவரிடம் ஸ்வாமின்     அடியேன் திரும்பி செல்ல நியமம்  வாங்கிக்கின்றேன் என்று  சொல்லி திரும்பிவிட்டார் 

மறுநாள் அதிகாலை திருவடி பந்தம் பிடிக்கும் திருவடிபிச்சான் சுந்தரராஜன் திருமாலையாண்டான்     திருமாளிகை க்கு வந்து அவரை   சேவித்து ஸ்வாமின்     

அடியேன் தெரியாமல் உமக்கு திருவடிபந்தம் பிடிக்கும் கைங்கர்யத்தில் நேற்று அபச்சார  பட்டுவிட்டேன் என கூறதிருமாலையாண்டான் என்னடா      சொல்லுறே என்ன  அபச்சாரம்     பண்ணேன்னு கேட்க     

ஸ்வாமி நேற்று மாலை உடல் அசதியால் மாலையில் இருந்து இரவு         வரை நன்கு தூங்கி விட்டேன் அதனால் எப்போதும் தேவரீருக்கு      திருவடி பந்தம் பிடித்து  வழிகாட்டும் கைங்கர்யத்துக்கு நேற்று வர    முடியவில்லை     

ஸ்வாமின் தேவரீர் நேற்று வனாந்திர இருட்டில்  விளக்கு இல்லாமல் எப்பிடி  இந்த திருமாளிகைக்கு     எழுந்தருளினீர் என கேட்கதிருமாலையாண்டான், என்னடா     புத்தி மங்கிவிட்டதா நீதானே நேற்றும் எப்போதும் போல் எனக்கு     திருவடிபந்தம் பிடித்து வந்து இங்கே என்னை விட்டு விட்டு நியமம் பெற்று போனாய்  என்று  சொல்ல   ஸ்வாமி அடியேன் வரவேயில்லை என்று  சுந்தர்ராஜன் மறுக்க  அப்போதுதான் திருமாலையாண்டானுக்கு தெரிந்தது நேற்று பந்தம் பிடித்து வந்தவன்  தன் சிஷ்யனான இந்த சுந்தர்ராஜன் அல்ல 

சாட்சாத்ஆதிமூலமான அந்த

சுந்தர்ராஜனே என உணர்ந்து உடனே திருமாலிருந்சோலை சென்று ஸ்வாமியே தேவரீரே நேற்று திருவடி பந்தம் பிடிப்பவனாக வந்து     இந்த அடியவனைக்கு நீரா வழி காட்டினீர் என அழகர் திருவடிகளை பிடித்து கொண்டு கதறி அழுதாராம் திருமாலையாண்டான் சுந்தர்ராஜனான அந்த அழகர் திருவடிபந்தம் பிடித்து தன்னையும் சிஷ்யனாகவே பாவித்து கைங்கர்யம் செய்த உண்மை தெரிந்ததும் திருமாலையாண்டான்திருமாலிருஞ்சோலை அழகரின் சௌலப்பியத்தை நினைத்து ஆனந்த கண்ணீர் மல்க அவனை அன்று ஆனந்தமாக ஆராதித்தாராம்

சிஷ்யனாக வந்து திருவடிபந்த சேவை செய்ததால் திருமாலையாண்டான் பரமபதித்ததும் அவருக்கான இறுதி காரியங்களை அழகர் தம் பரிவாங்களை கொண்டு அர்ச்சக பரிசாரக முகேனமாக செய்கிறார் 

திருமாலையாண்டான் பரமபதித்த நன்னாள் ஐப்பசி மாதம் வளர்பிறை துவாதசி திதி 

அதனால் தான் அழகர் வருடாவருடம் அந்நாளில் திருமாலிருஞ்சோலை மலைக்கு சென்று எண்ணெய் குளியல் செய்கிறார் 

அழகர் வருடம் இரண்டு முறை நூபுரகங்கைக்கு வருவார் ஒன்று ஆடிமாதம் அழகரின் வருடாந்திர பிரம்மோச்சவத்திற்க்கு மற்றொன்று ஐப்பசி மாதம் வளர்பிறை துவாதசியான திருமாலையாண்டான் பரம்பதித்த நாளன்று

கலியுகத்தில் பகவான் மனிதரூபமாகவே வந்து கைங்கர்யம் செய்வான் எனவே அபிமானிகளே ஆபத்தில் உங்களுக்கு யாரேனும் உதவினால் அவர் உங்களூர் பெருமாளாகவே கூட இருக்கலாம் 

எனவே யாரையும் அலட்சியம் செய்யாதீர்கள்

திருமாலிருஞ்சோலைமலைமென்றேன் என்ன திருமால்வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான குருமா மணியுந்து புனல்பொன்னித் தென்பால்

திருமால்சென்று சேர்விடம் 

தென்திருப்பேரே

அழகர் திருவடிகளே சரணம் சரணம்.

Krishnamachari Santhanam

No comments:

Post a Comment